மாறுங்கள்
உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!!
இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை கூடப்பிறந்தவர்களோ என்று யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!!
உங்களையே நீங்கள் அறியாத வரை, உங்கள் வழிகாட்டல் இங்கு யாருக்கும் தேவையில்லை!! உங்கள் வழிகாட்டுதல் படியும், உங்கள் யோசனைப்படியும் நீங்கள் மற்றவர்களை கட்டாயப் படுத்தலாம். மேலும் உங்கள் பேச்சின் படி நடக்காதவர்களிடம் கோபம் காட்டலாம். அவர்களை முடக்கலாம், ஊனப்படுத்தலாம்!! ஆனால் அவர்களின் உண்மையான மாற்றத்திற்கு (உள்முக மாற்றத்திற்கு) உங்களால் ஒருபோதும் உதவ முடியாது!!
உங்களுக்குள் நீங்கள் மாற்றப்படாதவரை…. மற்றொருவரின் வாழ்க்கைக்குள் செல்லாதீர்கள். நீங்கள் ஞானத்தின் ஒளியால் நிரப்பப்பட்டால், நீங்கள் உதவலாம்!! இன்னும் சொல்லப்போனால் உண்மையில் நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை!!
ஏனெனில், விளக்கில் இருந்து ஒளி பாய்வது போலவோ, மலரிலிருந்து நறுமணம் பரவுவது போலவோ, இரவில் சந்திரன் பிரகாசிப்பது போலவோ உங்களிடமிருந்து உதவி அதுவாகவே பாயும்!!
மலர் அதன் நறுமணத்தை பரப்புவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை!! சந்திரனின் அதன் ஒளியை எங்கும் பரப்புவதற்கு எந்த பிரயாசையும் எடுத்துக் கொள்வதில்லை!! அது – அதனின் இயல்பாகவே எங்கும் பாய்கிறது!!
உங்களுடைய உள் முகம் மாற்றத்தின் மூலம் நீங்கள் – உங்களுக்கு ஒளியாக மாறினால், நீங்கள் மற்றவர்களுக்கு வெளிச்சமாகி விடுவீர்கள்!! இதுவே உங்களின் இயல்பான நிலையாகி விடும்!! இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
மனிதன் தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும் போது தான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான்.
வாழ்க்கை என்றால் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும். அங்கே சமநிலை தேடுவதை விட சமாளித்துச் செல்வதே புத்திசாலித்தனம்.
எவ்வளவு மிகப்பெரிய கப்பலையும் தரைதட்டி நிற்க வைக்க மிகச்சிறிய நங்கூரம் போதுமானது. எவ்வளவு பெரிய தோல்விகளையும் கடந்து வர மிகச்சிறிய நம்பிக்கை போதுமானது.
ஒரே குறிக்கோள், எல்லையற்ற ஊக்கம், தளர்வில்லாத நெஞ்சுறுதி, சளைக்காத உழைப்பு, நேர்மையான பாதை ஆகியவை இருந்தால் வெற்றி கிடைக்காமலா போய்விடும்.
எந்த ஒரு விஷயத்திலும் மனிதனின் எதிர்பார்ப்பு வேறு. அதற்கான எதார்த்தம் எனும் உண்மைநிலை என்பது வேறு.
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு எதார்த்தமான உண்மையை ஏற்றுக்கொள்ள பக்குவம் வேண்டும்.
அதுதான் வாழ்க்கையில் வெற்றியை நோக்கிய முன்னேற்றத்தை கொடுக்கும்.
சந்தோசம் ஊது பத்தி மாதிரி பொசுக்குன்னு முடிஞ்சிடும். கஷ்டம் கொசுவர்த்தி சுருள் மாதிரி சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கும்.
அதிக குழப்பங்களில் ஆசைக்கு இடம் கொடுக்காதீர்கள். தவறுகள் புகுந்து விடும். கைத்தட்டல்கள் வேறுவேறானவை. சிலருக்கு சிம்மாசனத்தைத் தரும். சிலருக்கு இறுதி வரைச் சில்லறையை மட்டுமே தரும்.
மற்றவர்களின் பிழைகளைச் சுட்டுவதற்கு முன் ஒரு முறைக் கண்ணாடியைப்பார்த்துக் கொள்வது நல்லது.








