• Tue. Feb 18th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 5, 2025

பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்;
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது
தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை.
அதற்கு நம் நிழலே போதும்.

நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,
சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை. இனியும் பிறக்க மாட்டான்.

பரபரப்பாக ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.

எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.