• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 3, 2025

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்

 ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.
• குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.

• உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியில் பரவச் செய்யுங்கள். அந்த தெய்வீக இயல்பே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒழுங்குள்ளதாக மாற்றிவிடும்.

• எல்லா உயிர்களும் கோயில் என்பது உண்மைதான். ஆனால், மனிதவுயிரே மகத்தான கோயில். அதை வழிபட இயலாதவன் வேறு எதையும் வழிபட முடியாது.

• யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா.

• உடலில் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் ஏதும் உண்டாகாது. மாறாக, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் மனதில் ஊக்கத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயர முடியும்.

• மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை இலக்காக கொண்டு முன்னேறுங்கள்.

அரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.

நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை.. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.

சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.