ஓரு ஹாஸ்டல்ல 100 பேர் இருந்தாங்க. அந்த ஹாஸ்டல் கேன்டீனில் தினமும் தோசை போட்டுகிட்டிருந்தாங்க.
மாணவர்களில் பலருக்கும் செம கடுப்பு. ஒருநாள் அவங்கல்லாம் சேர்ந்து வார்டன்கிட்டே போய் மெனு மாத்தணும்னு சொன்னாங்க.
அதே ஹாஸ்டல்ல 20 பேர் தோசை பிரியர்கள். மெனுவை மாத்தறது அவங்களுக்குப் புடிக்கலே.
வார்டன் பாத்தாரு. மல்டிபிள் சாய்ஸ் மாதிரி ஒரு லிஸ்ட் குடுத்து, அதில் விருப்பமானதை தேர்வு செய்யச் சொன்னார். அதில் தோசையும் இருந்துச்சு.
தோசை பிரியர்கள் 20 பேரும் தோசையை செலக்ட் செஞ்சாங்க.
தோசை புடிக்காத பசங்க, பரோடா, சப்பாத்தி, பிரெட்-பட்டர், பிரெட் ஆம்லெட், இட்லி-வடைன்னு ஆளாளுக்கு அவங்களுக்குப் பிடிச்சதை டிக் பண்ணிக் குடுத்தாங்க.
ஒவ்வொரு ஐட்டத்துக்கும் 10-15 ஆதரவுதான் கிடைச்சுது.
ஸோ… மறுபடி தோசையே தலைவிதியா ஆயிடுச்சு.
தோசை உணவுதான். முழுங்கிடலாம். ஆனா அரசியலில் அப்படியில்லை.
தோசை வேண்டாம்னா வேற ஏதாவது ஒன்னை எல்லோரும் சேர்ந்து இணைந்து தேர்வு செய்யுங்க..
ஆளாளுக்கு ஒரு மெனு செலக்ட் பண்ணா தோசை பிடிச்ச 20 பேர் செலக்ட் பண்ணுற தோசை தான் மறுபடி கிடைக்கும்.. சூதானமா இருந்துக்கோங்க..
Think before you vote.
படித்ததில் பிடித்தது
