• Mon. Jan 20th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 4, 2025

பூக்களைப் பாருங்கள் புரியும்!

பூக்கள் ஒரு போதும்
புலம்புவதில்லை!

ஜன்னம்- சகதியில் நிகழந்தாலும்
முட்களுக்கு இடையே
மோதலில் பிறந்தாலும்
பூக்கள் ஒரு போதும்
புலம்புவதில்லை!

தரிசனம் தந்து
கவலை மறக்க்க கற்றுத்தரும்
ஞானிகள் – மலர்கள்!
’பெறுவதைவிடத் தருவதே சுகம்’
இது –
மலர்கள் மௌன பாஷையால்

சொல்லும்
மகாதத்துவம்!

கிள்ளுகிற கைகளுக்கும்
கிளுகிளுப்பைத் தரும்
உன்னத உள்ளம்
பூக்களுக்கு மட்டுமே உண்டு!

எந்திரச் சக்கரங்களுக்குள்
நசுக்கப்பட்டாலும்
வாசனைத்திரவியமாகி
சாகாவரம் பெற்றுச் சரித்திரம்
படைக்கிறது!

பலன் தருவதே வாழக்கை
இந்த பாடம் படிக்கப்
பள்ளிக்கூடம் வேண்டாம்.
பூக்களைப் பாருங்கள் புரியும்!