• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 17, 2024

 “உன் பார்வையும் சிந்தனையும் ஒன்றிணைந்து செயல்பட்டால் உன் வாழ்க்கை பெரிய உயரத்தை அடையும்.!”

“ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!”

“அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக குறுகியகாலம் மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்.!”

“பிறருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் நீங்கள் தெளிவாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.!”

“வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!”

“பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.”

“நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்.. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.!”

“நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை.. நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!”

“முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!”