• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 11, 2024

வரலாறு உன் பெயரை
சொல்ல வேண்டுமானால்
நீ பல முறை என்னை
தேடி வர வேண்டும்
இப்படிக்கு முயற்சி.

உன் வெற்றிக்கான
ஒவ்வொரு வாய்ப்பும்
உன் ஒவ்வொரு முயற்சியிலும்
உன் நம்பிக்கையிலும் தான்
ஒளிந்திருக்கும்.

வாழ்க்கை என்பது
ஒரு போதும் நீ எதிர் பார்ப்பது
போல அமையாது ஆனால்
நீ எதிர் பார்ப்பது போல
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக் கொள்ள முடியும்..
நீ முயற்சி செய்தால்.

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன்
எல்லாம் மனிதன் இல்லை.
தன் உயிர் இருக்கும் வரை
முயற்சி செய்து கொண்டிருப்பவனே
மனிதன்.