ஊக்கமூட்டும் மேற்கோள்கள்
💐விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..!
💐கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..!
💐வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.!
💐விதை போராடுவதால் மட்டும் தான் மண்ணிலிருந்து வெளிவந்து ஒரு மரமாக கம்பிரமாக நிற்கிறது.. நாம் போராடினால் மட்டும் தான் துன்பங்களை கடந்து தடைகளை உடைத்து கம்பிரமான மனிதராக மிளிர முடியும்.
💐வாழ்வின் விடை மரணம் எவராலும் மறுக்க முடியாது.. இடையில் வாழும் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள்.!