• Tue. Feb 11th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 13, 2024

தினம் ஒரு பொன்மொழி

1.இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்.

2. அழகு முகத்தில் இல்லை இதயத்தின் ஒளி.

3. உங்கள் உடலில் இருந்து சிந்தக் கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வலிமை பெற்றவை.

4. மனிதன் செய்கிற குற்றங்களுக்கு கடவுள் ஒருபோதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்.

5. கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக மாற்ற பொது அறிவு பத்துமடங்கு தேவை.

6. ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும்.

7. பெருந்தன்மை என்பது, உங்களால் முடிந்ததைவிட அதிகமாகக் கொடுப்பது; பெருமை என்பது உங்களுக்கு தேவையானதைவிட குறைவாக எடுத்துக்கொள்வது.

8. மனிதன் இரண்டு பேர்வழி. ஒருத்தன் இருளில் விழித்திருக்கிறான். மற்றவன் ஒளியில் தூங்குகிறான்.

9. நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.

10. வறுமையை விட மனிதனின் அறியாமையே கொடூரமானது.