1. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று. நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய, கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போராடவோ அன்று.
2. மதங்கள் உலகத்தில் இருக்க வேண்டியவதைதான். மதங்களால் தான் மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க முடியும்.
3. அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவே போற்றி மதிக்கப்படுகிறார்.
4. கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை.
5. மனிதர்களுக்கு நன்மை செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு இணையாக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது.
6. பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.
7. கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் பொங்கினால் அற்பமான அகந்தை தோன்றாது.
8. நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.
9. ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.
10. மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.