வருகின்ற ஜூலை 9ஆம் தேதியன்று தி.மு.க அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பாதயாத்திரை தொடங்குவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாத யாத்திரை வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இனி தமிழக அரசியல் தான் முக்கியம். திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுகவினர் சொத்து பட்டியல் மற்றும் முதல்வர் தொடர்பான ஊழல் விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி மிரட்டி பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். பாஜகவும் பயப்படாது. முதல்வர் ஸ்டாலின் என் மீது நேரடியாக அவதூறு வழக்கு போட்டு உள்ளார். அதை நான் வரவேற்கிறேன். வருகின்ற ஜூலை 9ஆம் தேதி தொடங்கும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை டிசம்பரில் முடியும். பாதயாத்திரையின் போது தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.