• Tue. May 30th, 2023

ஒரு கோடி பார்வைகளை கடந்து கம்பீரமாய்! அரசியல் டுடே!

பத்திரிகை துறையில், உடனுக்குடன் செய்திகளை வழங்குவதில், ஆயிரம் ஊடகங்கள் இணையத்தை ஆட்கொண்டிருக்கும் நிலையில், 6 மாத காலத்தில் 1 கோடி பார்வைகளை கடந்து சென்று வெற்றி பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்!

உண்மைச் செய்தியை உள்ளவாறே உரக்கச் சொல்ல வேண்டும். அதை தயங்காமல் சொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தொடங்கிய எனது பத்திரிகைக்கு உறுதுணையாக இணைந்தார்கள் திறமைவாய்ந்த செய்தியாளர்களும், அனுபவமிக்க எழுத்தாளர்களும்!

குறுகிய காலத்தில் செய்தியை சரியாக சேர்க்க வேண்டுமென்பதில் கவனமாக இருந்த எனக்கு, இன்று இணையதளத்தின் பார்வைகளின் எண்ணிக்கை மிரட்சி அடைய செய்தது! மேலும் என் உழைப்பை கூர் தீட்ட வேண்டும் என்ற எண்ணத்தையும் தோன்ற செய்தது! மென்மேலும் உங்களது ஆதரவு தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்…

23 ஆண்டுகால பத்திரிகை துறையில் இன்றளவும் மாணவனாக… 1 கோடி பார்வைகளை கடந்த கொண்டாட்டத்தில்…
தாழை நீயூஸ் & மீடியா குழும்பத்திலிருந்து
தா.பாக்கியராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *