

கோவை குனியமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் குனியமுத்தூர் பகுதியில் குடோனில் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஐந்து நாட்களாக கூண்டு வைத்து இன்று பிடித்தனர்.
கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதியில் உள்ள யானைகுந்தி அடர் வனப்பகுதியில் சிறுத்தை கூண்டில் இருந்து வனத்துறையினர் வெளியேற்றினர்
. மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது எனவும் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
