• Mon. Mar 24th, 2025

2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர் மனைவியுடன் மர்ம மரணம்…கொலையா?

ByP.Kavitha Kumar

Feb 28, 2025

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர்ஜீன் ஹேக்மேன் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேன்(93). சூப்பர் மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து இவர் பிரபலமானவர். ஆஸ்கர் விருதுக்கு இவரது பெயர் ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்து. ‘தி பிரெஞ்சு கனெக்சன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்காகவும், ‘அன்ஃபர்கிவென்’ திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்காகவும் என, இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை ஜீன் ஹாக்மேன் பெற்றுள்ளார். இதன்பின் 1970-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

இதன் பின் அவரது மனைவியான பெர்சியுடன்( 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள சாந்தா ஃபே என்ற நகரத்தில் வசித்தனர். நேற்று அவர்கள் வீடு வெகுநேரமாக பூட்டிக் கிடந்தது. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்கார்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து ஜீன் ஹாக்மேன் வீட்டிற்கு வந்த போலீசார், பூட்டிக் கிடந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜீன் ஹாக்மேனும், அவரது மனைவி பெர்சியும் உயிரற்ற நிலையில் கிடந்தனர். அத்துடன் அவர்கள் வளர்த்து வந்த நாயும் வீட்டுக்குள் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.