• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக நேற்றிலிருந்து வரும் 14ஆம் தேதி வரை 1148 மில்லியன் கன அடி பிறக்க அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி நேற்று மாலை அன்னையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது .

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாகவும், முல்லைப் பெரியாற்றில் இருந்து நீர்வரத்து ஏற்பட்டதாலும் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உயர்ந்தது. இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு 3000 கன அடி நீரை விடுவிக்க உத்தரவிட்டது .
இதனை தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வீதம் நேற்று முன்தினம் மாலை திறந்து விடப்பட்டது. ஏற்கனவே மதுரை ,திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் வழியாக 900 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது .மேலும் மதுரை ,ஆண்டிபட்டி சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், தேனி அல்லிநகரம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்காக அணையிலிருந்து 69 கன அடி நீர்வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் வைகை அணையில் இருந்து 3969 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு தற்போது வரை வினாடிக்கு 2,761 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இது படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதால், ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஆற்றில் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக மொத்தம் அணையில் இருந்து 1 டிஎம்சி தண்ணீர் இராமநாதபுரம் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது .