ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சை அருகே நடைபெற்ற விழாவில் சசிகலாவுடன் சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஓபிஎஸ்,சசிகலா இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வைத்தியலிங்கத்தின் சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சசிகலா தஞ்சையில் இருந்து புறப்பட்டு பின்னர் நிகழ்ச்சி முடித்து விட்டு வெளியே வந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டனர்.
இதுகுறித்து வைத்தியலிங்கம் கூறும்போது… சசிகலாவை எதோச்சையாக சந்தித்தாகவும்,தனதுபிறந்த நாளான இன்று சசிகலாவிடம் வாழ்த்து பெற்றதாகவும் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு
