ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
சென்னையில், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், “எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது; பழைய நிலையே தொடர வேண்டும்’ என்று, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, மனக் கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு, அதிமுகவின் வெற்றியே பிரதானம் என இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜூ, “ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது.
அரசியல் கட்சியை பொறுத்தவரை, கட்சியை வழி நடத்துவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான். ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை” என்றார்.
ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது-கடம்பூர் ராஜூ
