• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுக்கிறார் -இபிஎஸ் மனு

ByA.Tamilselvan

Dec 9, 2022

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்” என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார். இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறப்பட்டிருந்தது.