• Sat. May 4th, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடும் – ஓ.பி.எஸ். ஆதரவாளர் எம்.எல்.ஏ. ஐயப்பன் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 1, 2023

செப்டம்பர் மூன்றாம் தேதி காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ். அரசியல் திருப்புனையாக புரட்சி பயணம் துவங்க உள்ள நிலையில் இந்த பயணம் வெற்றி பெறுவதற்காக ஓ.பி.எஸ் ஆதரவாளர் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ ஐயப்பன் கூறுகையில்,

வருகிற மூன்றாம் தேதி அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் வெற்றியடைய அறுபடை வீடுகளில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து தரிசித்து வந்திருக்கிறோம்.

அதிமுக மாநாட்டிற்கு போட்டியான புரட்சி பயணமா என்ற கேள்விக்கு,

அதிமுக மாநாடு பூஞ்சான் புளியோதரை மாநாடு. வந்த தொண்டர்கள் உணவு அருந்தாமல் சென்றதால் புளியோதரைகள் அண்டாண்டாக மிஞ்சியது. அதை குழியில் போட்டு புதைத்தார்கள். அது எழுச்சி மாநாடு அல்ல குழியில் போட்டு புதைத்த மாநாடு.

கொடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு,

கொடநாட்டில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை நடைபெற்றுள்ளது. இது குறித்து திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள நாங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை வைத்துள்ளோம்.

அதிமுக 2,3 அணிகள் இல்லை ஒரே அணி தான் இன்று இபிஎஸ் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு,

உண்மையான அதிமுக யார் என்று வருகிற நாடாளுமன்ற தேர்தல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் தெரிவிக்கப்படும்.

ஓபிஎஸ் சார்பாக தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு,

இந்த அனைத்து தீர்ப்புகளும் வாங்கப்பட்டது. ஓபிஎஸ் தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம்.

ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கு,

எங்களிடம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் எங்கள் பதிவுகளில் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இவர்கள் ஒவ்வொரு நீதிமன்றமாக சென்று தீர்ப்பை வாங்குகிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரிக்கை வைத்து ஓபிஎஸ் வெற்றி பெறுவார்.

பாஜக எடப்பாடிக்கு அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு,

நாங்கள் பாஜகவை பற்றி கவலைப்படவில்லை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நாற்பது தொகுதிகளிலும் போட்டியிடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *