ஆண்டிமடத்தில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் சந்திப்பில், திமுக அரசு என்எல்சி நிர்வாகத்துக்கு அடிமையாக உள்ளது. உண்மையான மக்கள் நலன் சார்ந்த அரசாக இருந்தால் என்.எல்.சி.யை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். என்எல்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை சார்ந்தோருக்கு வேலை கொடுப்பது மற்றும் ஏகப்பட்ட ஊழல்கள் என்எல்சியில் நடந்து கொண்டிருக்கிறது. வடலூரில் பாமகவின் 35 வது ஆண்டு துவக்கவிழா பொதுகூட்டத்துக்கு அரசு அனுமதி மறுப்பதை. எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்கு சென்றோம். அங்கு பாமக குறித்து தமிழக அரசு வழக்கறிஞர்கள் பல அவதூறுகளை சொன்னார்கள். பாமக வன்முறை கட்சி, என்றும் பாமக நடத்தும் கூட்டங்களில் எல்லாம் வன்முறை நடக்கிறது என சொன்னார்கள். வன்மையாக கண்டிக்கிறோம்,நிறுத்திக் கொள்ளுங்கள் நாங்கள் உங்களைப் பற்றி பேசினால் திமுக மட்டுமல்ல நாடும் தாங்காது. ஏற்கனவே நெல்லை உட்பட பால் வேறு பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறோம் திமுக பயந்து கூட்டம் நடத்த மறுக்கிறது, நீதிமன்றத்தின் அனுமதியுடன் பொது கூட்டம் நடத்தப்படும் அதில் சிப்காட் பிரச்சனை இருக்கு, நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது, மாசு படிந்து இருக்கிறது, நெல் விலை, பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும், இப்படி பல்வேறு பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் இவை அனைத்தையும் பொதுக்கூட்டத்தில் பேச போகிறோம்.
பாமக தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவுக்கே பல சாதனைகளை தந்துள்ளது. அதில் குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம், தேசிய கிராமபுற சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறிக் கொண்டே போகலாம்.
திமுக பாமகவை வன்முறை கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் போட்ட வழக்கை திரும்ப பெறவில்லை என்றால் கலைஞருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கிடைத்திருக்காது. 2006-ல் மைனாரிட்டி அரசாக இருந்த திமுக முழுமையாக 5 ஆண்டு ஆட்சி நடத்த காரணம் பாமக தயவால்தான்.தமிழக அரசு நெல் ஒரு குவிண்டாலுக்கு 7 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது. இது மிக குறைவான தொகை. எனவே கூடுதலாக குவிண்டாலுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும். குறுவை பயிர்கள் கருகும் சூழ்நிலை உள்ளது. உச்சநீதி மன்றம் சென்று தண்ணீரை திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா எந்த காவிரி மேலாண்மைக்கும் பணியமாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்றம் செல்வதுதான் ஒரே வழி. தமிழகத்தில் 23சுங்கச் சாவடிகளில் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடி வசூலில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது. இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அரியலூர் மாவடடத்தில் சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் இயங்குகிறது. கேஸ் சிலிண்டர் விலையை எப்போதோ குறைத்து இருக்க வேண்டும். தற்போது 200 ரூபாய் குறைத்தது போதாது. 500 ரூபாயாக குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது. காவல்துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை. மாவட்ட எஸ்பிக்களை அழைத்து மாதம் ஒரு கூட்டம் நடத்தி கடுமையாக நடந்து கொண்டால் இவை முற்றிலும் ஒழிக்கப்படும். போதை ஒழிப்பு பிரிவில் அதிக காவலர்களை நியமிக்கவேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது. கூட்டணி நிலைபாடு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.