• Mon. Jan 20th, 2025

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ByM.maniraj

May 22, 2022

கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும், மேலும் உள்ள 6 குற்றவாளிகளையும் விடுதலை செய்வோம் எனக்கூறிய முதல்வர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும் , தீர்ப்பை கொண்டாடிவரும் அனைத்து அரசியல் இயக்கங்களையும் கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் கார்த்தி காமராஜ், மாவட்ட துணைத்தலைவர் திருப்பதி ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜா, நகர தலைவர் அருண்பாண்டியன், மாவட்ட துணை தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் செல்வராஜ் பாண்டி, மாவட்ட துணை தலைவர் வீர பெருமாள், எஸ்சி /எஸ்டி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து, வடக்கு மாவட்ட அமைப்புசரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜோஸ்வா, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகர், உமாசங்கர், பிரபு ,உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி காங்கிரஸ் கட்சினர் மரியாதை செய்தனர்.