• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வெள்ள நிவாரணம் ரொக்கமாக வழங்க எதிர்ப்பு..!

Byவிஷா

Dec 12, 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நிவாரண நிதி ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கினால் அதிக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் வங்கி கணக்கில் செலுத்தினால் பிரச்சனை இருக்காது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு தரப்பில் இருந்து வங்கி கணக்கில் செலுத்தினால் மினிமம் பேலன்ஸ் மெயின்டன் செய்யாதவர்கள் பயன் பெற முடியாது என்றும் வங்கி மினிமம் பேலன்ஸை எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.