விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி, எரிச்சநத்தம் சிவகாசி, கன்னி சேரி சிவகாசி, விருதுநகர் சிவகாசி, சாத்தூர் சிவகாசி, கழுகுமலை சிவகாசி ,ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.52 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையக படுத்த 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்பு பணிகள் தொடங்கியது.

சுற்றுச்சாலை பணிக்காக ஈஞ்சார், வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, ஆனையூர் கொங்கலாபுரம், திருத்தங்கல் ,கீழத்திருத்தங்கல், வெற்றிலையூரணி, நாரணபுரம், அனுப்பங்குளம், ஆகிய 10 வருவாய் கிராமங்கள் வரை எண்பத்தி ரெண்டு நில உரிமையாளர்களிடம் இருந்து 132.8 ஹெக்டர் பட்டா நிலம், அரசு நிலம் 14.6 ஹெக்டர் என மொத்தம் 147.4 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பணிகளை மூன்று பிரிவுகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக பூவனாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி, எரிச்சநத்தம் சிவகாசி, விருதுநகர் சிவகாசி, சாலைகளை இணைக்கும் வகையில் 10.5 கிலோமீட்டர் தூரம் ரோடு அமைக்க ரூபாய் 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாவதாக மூன்றாம் கட்ட பணிகளுக்காக நில எடுப்பு பணிகள் 100% முடிந்து நிலையில் மண் பரிசோதனை செய்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிநடைபெற்று வருகிறது.
இப்ப பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியது முதற்கட்ட சுற்றுச்சாலை பணியில் பெட்டி பாலம், குறுக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த இரு கட்ட சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்தில் வடமலாபுரம் முதல் நாராயணபுரம் சுந்தர்ராஜபுரம் கொங்கல்லபுரம் ஆலங்குளம் ரோடு வழியாக பூவநாதபுரம் விளக்கு 23 கிலோமீட்டர் தூரத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் வழிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்காக ரோடு அமைய உள்ள பகுதிகளில் மண் பரிசோதனை பாலம் அமைய உள்ள இடங்களில் அறிவிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் ரோடு அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.