• Sat. Jul 12th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

அக்கறை இல்லாத அரசு திமுக அரசு..,

ByRadhakrishnan Thangaraj

May 22, 2025

நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக அரசு அவர்கள் வீட்டு மேல் மட்டுமே அக்கறையாக உள்ள அரசாக செயல்படுகிறது

கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு வாய்ப்பு தேடி கோடம்பாக்கம் தெருவில் சுற்றித்திரிந்தவர் இன்று ஆயிரம் கோடிக்கு தொழில் செய்யும் அளவிற்கு பெரிய ஆளாக இருக்கிறார். அதற்கு ஒரே தகுதி திமுக குடும்பத்தில் மு க முத்துவின் மகள்வழி பேத்தியை திருமணம் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் அருகே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் ஏற்பாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தயார் செய்யப்பட்டிருந்த அசைவ சாப்பாடு அன்னதானமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது விளம்பர அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

விளம்பர அரசு என்று நீடிக்காது மக்கள் மீது அக்கறை இல்லாமல் தனது வீட்டு மக்கள் மீது அக்கறை உள்ள அரசாங்க திமுக செயல் பட்டு வருகிறது. நாட்டு மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை தங்கள் வீட்டு மக்கள் மீது தான் கவலை அதற்கு ஒரே உதாரணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடி சென்னை சுற்றி வந்த நபர் இன்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு கலைத்துறையில் சம்பாதித்துள்ளார்.

அவர் மு.க முத்துவின் மகள் வழி பேத்தியை திருமணம் செய்துள்ளார். அந்த ஒரே தகுதி தான் அவர் ஆயிரம் கோடி சினிமா துறையில் தொழில் செய்துள்ளார். அவர்தான் ஆகாஷ் பாஸ்கர் என்பவர் . லத்தீஷ் உதயநிதியின் கூண்டு பறவையாக இருந்தவர் கூண்டை விட்டு பறந்து சென்று விட்டார். இவர் குபேரனுக்கு 1000 போடி கடன் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

பணம் மாற்றம் செய்வதற்காக இவர் பயன்படுத்தி வந்துள்ளார் இவர்கள் செய்யும் செயல்களை மக்கள் கவனித்து வருகின்றார்கள். மக்கள் இது விளம்பர அரசு விளம்பர அரசு என்று நீடிக்காது இந்த அரசை அப்புறப்படுத்த மக்கள் தயாராகி விட்டனர். 2026 அதிமுக ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.