மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் பொருட்டும், சாலை விபத்துகக்ளை கண்காணித்து தடுக்கும் விதமாக மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளான ஒத்தக்கடை, விரகனூர், கூத்தியார்குண்டு ஆகிய மூன்று இடங்களில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதுரை டீன் லீடர்ஸ் என்னும்
தனியார் பங்களிப்புடன் முற்றிலும் சோலார் சக்தியுடன் கூடிய நவீன கேமராக்களுடன் காவல் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார். இவ்விழாவில் துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பு அறையை திறந்து வைத்த போலீஸ் சூப்பரண்டு சிவப்பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது : ஒட்டச் சம்பவங்களை தடுக்கவும் சாலை விபத்துகளை கண்காணித்து அவற்றை தடுக்கும் பொருட்டு புறநகர் பகுதியில் நவீன வசதியுடன் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் பதிவாகும் காட்சிகளை எங்கள் இருப்பிடத்திலிருந்து கண்காணிக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் புறநகர் பகுதிகள் ஐந்து இடங்களில் இது போன்ற கண்காணிப்பாறை அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.