

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வஉசி யின் 152 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாகவும் வாடிப்பட்டி வ உ சி மகளிர் சுய உதவி குழு சார்பாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் பழ தங்கராசு பிள்ளை தலைமை தாங்கினார் வெள்ளாளர் உறவின்முறை புரவலர் மாரியப்பா பிள்ளை முன்னிலைவகித்தார் ஆலோசகர் பாபநாசம் பிள்ளை கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
வெள்ளாளர் உறவின் முறைநிர்வாகிகள் பொன்னையா பிள்ளை, மோகன் பிள்ளை, சந்தன பாண்டி பிள்ளை, வேல்முருகன் பிள்ளை, ஆகியோர் வ உ சி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் பிள்ளை, உப தலைவர் முருகவேல் பிள்ளை, மக்கள் தொடர்பு நாகமுத்து ராஜா ஆகியோரும்சிறப்பு அழைப்பாளர்களாக பி டி ஆர்தொழில்நுட்பக் கல்லூரி தனவேலன் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வெள்ளாளர் முன்னேற்ற கழக தென்மண்டல அமைப்பாளர் G.G. அன்னலட்சுமி சகிலா கணேசன், விக்கி மதுரை மாவட்ட இளைஞர் அணி தலைவர், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் இம்பா மதுரை மாவட்ட தலைவர் வெங்கடாசலம் மற்றும் வாழ்த்துரையாக மாவட்ட பதிவாளர் ஓய்வு தியாகராஜன் பிள்ளை, சங்கர் பிள்ளை, ராஜேந்திரன், குப்புசாமி, அச்சுதன், கலியபெருமாள், சரவணன், முத்து சரவணன், உள்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர். தொடர்ந்து வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது..
