ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்கள் படிப்பதற்காக நூலகம்திறப்பு.. இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 08.02.2023 அன்று செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். அவர் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் பொது மக்கள் படிப்பதற்காக நூலகத்தை திறக்க அறிவுறுத்தினார். அதன் பேரில் முதற்கட்டமாக இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் உருவாக்கப்பட்ட நூலகத்தை வேலூர் சரக காவல் துணை தலைவர் M.S முத்துசாமி இ.கா.ப., திறந்து வைத்தார்.
மேலும் இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகம் திறக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) . விசுவேசுவரய்யா, இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .பிரபு, ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் .விநாயகமூர்த்தி, தனிபிரிவு காவல் ஆய்வாளர் . அருண் ,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.