• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எட்டாவது புத்தக கண்காட்சி தொடக்க விழா..,

ByS. SRIDHAR

Oct 3, 2025

இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் நமது திராவிட மாடல்ஆட்சியின் ஐந்து ஆண்டு கால சாதனை. எந்த காலகட்டத்திலும் எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது

தமிழகத்தின் உயர் கல்வியை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது…. அமைச்சர் ரகுபதி பெருமிதம்

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் இரவு முழுவதும் தூங்காமல் கரூர் மக்களை பாதுகாத்த தலைவராக நமது முதல்வர் உள்ளார் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க ஒரு தலைவன் என்ன செய்ய வேண்டும் என்பதை கரூர் சம்பவத்தின் போது முதலமைச்சரோடு நாங்கள் பயணித்து கற்றுக் கொண்டோம்….. அமைச்சர் மெய்ய நாதன் முதலமைச்சருக்கு புகழாரம்……

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து புதுக்கோட்டை நகர மன்றத்தில் எட்டாவது புத்தக கண்காட்சியை இன்று முதல் 10 நாட்களுக்கு நடத்த உள்ளது இதன் தொடக்க விழா இன்று புதுக்கோட்டை நகர மன்றத்தில் நடைபெற்றது. ஆட்சித் தலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்களுடைய பதிப்பு புத்தகங்களை காட்சிப்படுத்தி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி
மனிதன் நேரடியாக காட்சிகளை கண்டு கொள்வதை விட புத்தகத்தை படித்து அந்த காட்சி எந்த வடிவத்தில் இருக்கும் என்பதை உணர வைப்பது புத்தக வாசிப்பு …..
படிப்பு என்பது எந்த காலத்தையும் நம்ம விட்டுப் போகாது…. மறந்து போகாது …..
அதனால் தான் முதலமைச்சர் மாணவ மாணவிகளிடம் கல்வி என்பது யாராலும் நம்மிடமிருந்து திருட முடியாது.

மனிதர்களிடம் திருட முடியாத சொத்து இருக்கிறது என்றால் அதுதான் கல்வி என்று நினைத்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நமது வாழ்க்கையில் தானாக முன்னேற முடியும் அதனால்தான் முதல்வர் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி முதன்மையாக கல்வியை எடுத்து செல்கிறார். எனவேதான் இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்பதுதான் நமது அரசின் ஐந்தாண்டு கால சாதனை எந்த காலகட்டத்திலும் எந்த ஆண்டிலும் இல்லாத வளர்ச்சியை இந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது

அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாணவன் படித்து முடித்து வெளியே வரும் வரை அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தான் செய்து வருகிறது. தமிழகத்தின் உயர் கல்வியை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது இதற்கு மாணவ மாணவிகளின் வாசிப்பும் ஒரு காரணம்.

விழாவில் பேசிய அமைச்சர் மெய்ய நாதன்,

சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் இரவு முழுவதும் தூங்காமல் கரூர் மக்களை பாதுகாத்த தலைவராக நமது முதல்வர் உள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க ஒரு தலைவன் என்ன செய்ய வேண்டும் என்பதை கரூர் சம்பவத்தின் போது முதலமைச்சரோடு நாங்கள் பயணித்து கற்றுக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.