புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் முழுவதும் குளிர் ஊட்டப்பட்ட வசதி கொண்ட உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் திறந்து வைத்தனர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் துணை மேயர் லியாகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தின் முழுவதும் குளிரூட்டம் செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் இன்று திறந்து வைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தில் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் அறைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் திமுகவினர் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.