• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கீடு

ByA.Tamilselvan

Sep 28, 2022

வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுவரையில் 2 ரெயில்கள் வடக்கு ரெயில்வேக்கும் 1 ரெயில் மேற்கு ரெயில்வேக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐ.சி.எப்-ல் இருந்து 27 ரெயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயிலை ரெயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று இதுவரை இறுதி செய்யப்படவில்லை. சென்னைக்கு 5-வது அல்லது 6-வது வந்தே பாரத் ரெயில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், அல்லது மதுரை அல்லது கோவை ஆகிய ஏதாவது ஒரு நகரத்திற்கு இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.