• Fri. Jan 24th, 2025

அதிர்ச்சி… பறவை காய்ச்சல் பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

ByIyamadurai

Jan 7, 2025

அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அதிக தொற்றும் தன்மை கொண்ட எச்5என்1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை லூசியானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காட்டுப்பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தவிர, வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என லூசியானா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.