தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்வாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தென் கொரியாவின் சுகாதார அமைச்சகமும், தேசிய குழந்தைகள் உரிமைகள் மையமும் இணைந்து கடந்தாண்டு ஜூலை 16 முதல் அக்டோபர் 29 வரை 1,270(4 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்) குழந்தைகளிடம் கருத்துக்கேட்பு நடத்தியுள்ளனர்.
அவர்கள் கருத்துக் கேட்டதில், 81.4 சதவீத குழந்தைகள் மகிழ்ச்சியாக அல்லது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 18.6 சதவீத குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள். மகிழ்வாக இல்லாதவர்களில், 33.9 சதவீதம் பேர் கல்வி சார்ந்த மன அழுத்தத்தை காரணமாக தெரிவித்துள்ளார்கள். 27.5 சதவீதம் பேர் வருங்காலத்தை எண்ணி வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். பிறர், குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடி, வெளித் தோற்றம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களை கூறியிருக்கின்றனர்.
மேலும், இந்த ஆய்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க தென் கொரியா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.