விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எட்டையாபுரம் அருகே உள்ள இனம் அருணாசலம் கிராமத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் உயர்தர பேன்சி ரகவெடிகள் தயாரிக்க அனுமதி பெற்ற பட்டாசு ஆலையாகும்.
இந்த பட்டாசு ஆலையின் அருகே உள்ள மரங்களில் திடீரென தீப்பற்றி உள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் காற்றின் வேகத்தால் பட்டாசு ஆலைக்குள் தீப்பிடித்த மரத்தின் கிளைகள் விழுந்துள்ளது.
இதனால் பட்டாசு ஆலைகளில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது.

இதனால் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்து நாலாபுரமும் சிதறி ஓடினார்கள். அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பட்டாசு ஆலை உரிமையாளர் கந்தசாமி ஈடுபட்டிருந்தார்.
அனைவரும் தப்பிய நிலையில் கந்தசாமி தன்னுடைய காரில் ஏறி தப்பிக்க முயன்றார்.
புகை மூட்டத்தால் எந்த பக்கம் செல்வது என செல்ல முடியாமல் நின்று நிலையில் வெடித்து சிதறிய பட்டாசுகள் மேலே விழுந்ததில் இரும்பு கம்பி வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பட்டாசு ஆலை விபத்தில் அடுத்தடுத்த பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த சேமிப்பு அறை,புதிய பட்டாசு ஆலை கட்டிடம், தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அறைகள் முழுவதும் வெடித்து சிதறின.

மேலும் ஆலை வளாகத்திற்குள் இருந்த நின்று கொண்டிருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கந்தசாமியின் கார் மற்றும் தொழிலாளர்கள் அழைத்து வரக்கூடிய வேன்கள் பத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகின. தகவல் அறிந்த சாத்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு நிலைய வாகனங்களில் இருந்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எட்டையாபுரம் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த கந்தசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பட்டாசு ஆலை விபத்தில் விபத்து ஏற்படும் முன்பு தொழிலாளர்கள் தப்பியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பட்டாசு வேலை விபத்தில் பரிதாபமாக இறந்த சிவகாசியை சேர்ந்த கந்தசாமி விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராகவும், பட்டாசு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினராகவும், பணியாற்றி வருகிறார் .இவருக்கு சித்ரா என்ற மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)