• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள்- ஐயப்பன் எம்எல்ஏ பேட்டி

Byp Kumar

Feb 25, 2023

ஒன்றரை கோடி தொண்டர்களும் அண்ணன் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள், வருகின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள், அதன் மூலம் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். – ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் அதிமுகவினர் சார்பாக ஓபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ஐயப்பன் கூறுகையில்:
ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என்று புரட்சித்தலைவி அம்மா வழி காட்டுவர் அந்த அடிப்படையில் அவனியாபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் பொருள் உதவி செய்துள்ளோம்.


தீர்ப்புக்குப் பிறகு ஓபிஎஸ் தொண்டர்களின் மனநிலை குறித்த கேள்விக்கு:
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்க கூடாது இருந்தாலும், கடந்த காலத்தில் ஒரு நீதிபதி கருவேலை மரங்களை நீக்கி விடுங்கள் அது நிலத்தில் நீரை பாதிக்கிறது என்று சொன்னார், மற்றொரு நீதிபதி விறகு கடை அதிபர்களுக்காக கண்மாயிலிருந்த முள்களை நீக்காதீர்கள் என்று சொன்னார். இப்படி முரண்பட்ட கருத்துக்களை கூறுவதில் தகுதி வாய்ந்த நீதிபதி யார் என்று தெரியவில்லை, அந்த அடிப்படையில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. ஒரு நீதிபதி பொதுக்குழு செல்லும் என்று சொல்லியிருக்கிறார் மற்றொரு நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று சொல்லி இருக்கிறார். இதன் மூலம் ஓபிஎஸ் இன் உடன் இருக்கும் தொண்டர்களுக்கு எந்த வித பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் அதே உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டுக்கு தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று கூறி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிவுதான் எங்களிடம் உள்ளது, பொதுச்செயலாளர் என்கிற பதிவு எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் இரட்டை இலை சின்னம் அண்ணன் ஓபிஎஸ்க்கு தான் கிடைக்கும்.
அடுத்த கட்ட நகர்வு குறித்த கேள்விக்கு:
இன்று காலை முதல் அம்மாவின் பிறந்த நாளை நெகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறோம். மேலும் இது சம்பந்தமாக அண்ணன் ஓபிஎஸ் அறிக்கை தர உள்ளார், அதன் அடிப்படையில் உற்சாகமாக செயல்படுவோம்.
ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று இபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:
ஒன்றரை கோடி தொண்டர்களும் அண்ணன் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள், வருகின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள், அதன் மூலம் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு:
தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.