• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ByKalamegam Viswanathan

Feb 25, 2023

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடி மங்கலம் கிளை கழகம் சார்பாக கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகி பேச்சி கருப்பு கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஜானகிராமன், காமாட்சி, கல்லாங்காடு தவமணி, கருப்பு, அழகுமலை, வண்டிக்கார கருப்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.