• Wed. Nov 30th, 2022

குமரி கடலில் சொகுசு படகுகளின் இயக்கம் எந்த தேதியில்..?

Byadmin

Nov 9, 2022

த.இக்னேஷியஸ்

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரியின் பணிக்காலம்
நிறைவடைய இருந்த ஓர் ஆண்டு கால அவகாச இடைவெளியில், அன்றைய அ தி
மு க ஆட்சியின் காலத்தின் மாதங்கள் எண்ணப் பட்ட கால அவகாசத்தி. பூம்புகார்
அதிகாரி அன்றைய துறை சார்ந்த அமைச்சர் அல்லது துறையின் செயலாளரிடம்
எழுத்து பூர்வமாக அனுமதி பெற்று.கோவாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கும், அதிகமான படகு தயாரிப்பாளர்களிடமும் டென்டர் வாங்கப்பட்டு, இரண்டு அதி நவீன குளிர் சாதன வசதியுடைய இரண்டு படகுகள் கட்டுவதற்கான குறைந்த டெண்டர் தானா என்பதை தெரிந்தவர்கள். அன்றைய அ தி மு க., வின் அமைச்சர், துறை செயலாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் அப்போதைய மேலாளர் என்ற மூன்று மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம்.!

கோவாவில் தயாரித்த இரண்டு படகுகள் கன்னியாகுமரி வந்த நாளில் ஒப்பந்தம்
போட்ட அதிகாரி மட்டும் அல்ல, துறைசார்ந்த , அமைச்சர் எல்லாம் பதவி முடிந்து
போன முன்னாள் ஆகிவிட்ட நிலையில்.சம்பந்தபட்ட துறையின் செயலாளரின்
பணி எந்த துறையில் என்பது தெரியவில்லை.

கோவாவில் இருந்து வந்த அதிநவீன படகுகள் ஒவ்வொன்றிலும் 150 இருக்கை
வசதி கொண்டது கன்னியாகுமரிக்கு படகு வந்த பின்புதான் தெரியவந்தது. இப்போது இருக்கும் துறை முகத்தில் இந்த அதி நவீன படகை கட்டுவதற்கான கடல் ஆழம் இல்லை
என்பது.!
ஏற்கனவே இருந்த படகுகளான. பொதிகை,குகன், விவேகானந்தர் ஆகிய மூன்று
படகுகள் கட்டப்பட்டிருக்கும் இடத்திலிருந்து மாற்றி, புதிதாக வந்த தாமிரபரணி,
திருவள்ளுவர் ஆகிய படகுகளை அப்போதைக்கு கட்டியதுடன். சில நாட்களில் படகை வெள்ளோட்டம் விடுவதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட மூன்றுக்கும் அதிகமான அலுவலக அதிகாரிகளிடம் (சிறிய துறைமுகங்கள்) பெற்று, அதன் பின் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அனுமதி வழங்கிய பின் வெள்ளோட்டம் நடந்த சில மாதங்களுக்குள், தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு விட்டது.கொரோனாக்கால தடையும் வந்த நிலையில் மொத்த படகுகளின் இயக்கமும் தடை பட்டது.

நவீன படகுகள் ஒவ்வொன்றிலும் 150 இருக்கை வசதிகள் கொண்டது.இரண்டு
அடுக்குகளை கொண்ட மேல் அடுக்கு பகுதி முழுவதும் குளிர் சாதன வசதி
கொண்டது.இந்த பகுதியில் 39_இருக்கைகளை கொண்டது தாமிரபரணி.

திருவள்ளுவர் படகின் மொத்த இருக்கைகளும் 150_தான்,அதில்19இருக்கைகள்
மேல் பகுதியான குளிர் சாதன வசதி கொண்ட பகுதியில் உள்ளது.

அதிநவீன படகுகள் இரண்டும் கடந்த 20_மாதங்களாக கட்டப்பட்ட இடத்திலே
கடல் உப்பு தண்ணீரில் மிதந்த நிலையில் படகின் அடி பகுதியில் உப்பின்
தன்மையால் துரு பிடித்த நிலையில்.தமிழக மக்களின் வரிப்பணம் ஏற்கனவே.
பல்லாண்டுகளுக்கு முன். சின்ன முட்டம் மீன் பிடி துறை முகத்திற்கு மீன்
வளத்துறையால் கடலில் செல்லும் மீனவர்களின் படகுகள், கடலில் பழுதாகி
நின்றால் மீட்டு வர,கடல் சீற்றத்தால் பாதிக்கப்படும் படகுகளை மீட்டு
வர.வலம்புரி என்ற மீட்பு படகு அன்று ரூ.40_லட்சத்திற்கு வாங்கப்பட்டது. ஒரு
நாள் கூட எவ்விதமான பயன்பாடும் இல்லாது துறை முகத்திலே பத்து
ஆண்டுகளுக்கு மேல் கிடந்து துரு பிடித்து. இயந்திரங்கள், மற்றும் படகின்
அனைத்து பகுதி இரும்பு பாகங்களும்,துரும்பாகி போன் பின் கரையில் தூக்கி
வைத்தது.இன்றும் சின்னமுட்டம் துறை முகத்தில் ஒரு சாட்சியின்
அடையாளமாக உள்ளது.!!

வலம்புரி படகின் அவல நிலை.கோவாவிலிருந்து ரூ.8_கோடி மதிப்பீட்டில்
கட்டப்பட்ட,தாம்பிரபரணி, திருவள்ளுவர் படகுகளுக்கு வந்து விடுமோ.? என்ற
அச்சம்.குமரி மாவட்ட பொது மக்கள் மத்தியில் பேசு பொருளாக அலசப்படும்
காலையில் வந்த ஒரு நல்ல செய்தி.

நவம்பர் 1_ம் நாள் இரு நவீன படகுகளும்.குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு
இணைந்த 66_வது ஆண்டு விழாவை கொண்டாடும் நாளில்.சுற்றுலா பயணிகள்
படகு துறையில் இருந்து கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி
விவேகானந்தர் நினைவு மண்டபம் வழியாக வட்டக்கோட்டை பகுதி வரைக்கும்,
அங்கிருந்து நேராக கோவளம் மீனவ கிராமம், சூரியன் அஸ்தமிக்கும் பகுதி வரை
இயக்கப்பட போவதாகவும்.குளிர்சாதன பகுதி பயணத்திற்கு, நபர் ஒருவர்
கட்டணம் ரூ.800.00, குளிர் சாதன வசதி இல்லாத பகுதியில் இருந்து பயணிக்க நபர்
ஒருவர் கட்டணம் ரூ.600.00என்ற மகிழ்ச்சி செய்தி வந்த இரண்டு நாள்
இடைவெளியில் இப்போது வந்துள்ள வருத்தம் தரும் செய்தி.தமிழக அரசின்
பொதுப்பணித் துறையின் கீழ் இருக்கும் சிறு துறைமுக அதிகாரி மற்றும்
துறையின் அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு, கன்னியாகுமரிக்கு நேரில் வந்து
சம்பந்தப்பட்ட இரண்டு தாமிரபரணி, திருவள்ளுவர், படகுகளை நேரில் ஆய்வுக்கு
பின்பே படகுகள் இயக்கம் தேதி முடிவு செய்யப்படும் என்பதே இப்போதைய
செய்தி. இது குறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து
அதிகாரியிடம் கேட்டபோது.கிடைத்த பதில் எங்களுக்கு தெரியாது. சிறுதுறைமுகங்கள் அதிகாரிகள்தான் தேதியை அறிவிப்பார் என்பது தான். குமரி முக்கடல் சங்கமத்தில், இரண்டு அதி நவீன படகுகள் சுற்றுலா பயணிகளுடன் வலம் வரும் நாள்தான் என்று.?

11.05.202

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *