தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என ஸ்டாலின் கோயம்பல்ஸ் பொய்பிரச்சாரத்திற்கு எந்த ஆதாரம் இல்லை. இந்தியாவிலேயே அதிக கடன் சுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு, குடும்ப அரசியல், விலைவாசி உயர்வுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மதுரை கலைஞர் நூலகத்திற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி பார்வையிட கொண்டு வரப்படுகிறார்கள் படிக்க யாரும் அழைத்து வரவில்லை.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி,

கழக அம்மா பேரவையின் சார்பில் மதுரையில் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம் சூட்டியதை முன்னிட்டு, கோயில் அர்ச்சர்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூசியத்தில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவணபாண்டி மற்றும் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று வரலாறு சாதனை படைத்தனர். இதில் திமுக நிர்வாக சீர்கேடு, குளறுபடி, அரசின் கையாளகாதனம் ஆகியவற்றை தோலுரித்துக் காட்டி, இந்த நிலை மாற வேண்டும் என்றால் அம்மாவின் புனித ஆட்சி மலர வேண்டும் என்று எடப்பாடியார் பேசினார். அவரின் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் வழங்கினர்.
முதலமைச்சர் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என கோயம்பல்ஸ் பொய்பிரச்சாரத்தை பேசுவதை கண்டு சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை.
ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு 30 ஆயிரம் கோடியை, ஸ்டாலின் குடும்பத்தார்கள் கொள்ளையடித்துள்ளனர். அதை சமாளிக்க தெரியவில்லை என நாடு முழுவதும் ஒப்புதல் வாக்குமூலத்தை எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் கூறவில்லை, அவர்கள் கட்சியை சார்ந்த நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜர் கூறினார்.
ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகுதான் இந்தியாவிலே கடன் சுமை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உருவானது. ஏறத்தாழ 7,53,870 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளித்து வருகிறது. மகாராஷ்டிரா இரண்டாவிடம், உத்தரபிரதேசம் மாநிலம் மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.
மேலும் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பாலியல் அதிகரிப்பு என தமிழகம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால் தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என்ற பொய் பிரச்சாரம் செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்றைக்கு 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் எந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளீர்கள். அதற்கு பதில் சொல்லும் வகையில் விளம்பர வெளிச்சத்தில் தங்களை காண்பித்து வருகிறார்கள். மக்கள் கடும் கோபத்தையும், வேதனையும், கண்ணீரையும் விளம்பர வெளிச்சத்தில் மறைத்து வைத்துள்ளீர்கள்.
வாரிசு அரசியல் ,குடும்ப அரசியல், சர்வாதிகாரம் என குடும்பத்தை பலப்படுத்திக் கொண்டு வருகிறீர்கள். இந்த அதிகாரம் உங்கள் குடும்பத்திற்கு சொந்தம் என்று தமிழகத்தை காவு கொடுத்து விட்டீர்கள்.
முதலமைச்சரையும், அமைச்சரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, சாமானிய நிலை மாறி அரசியல் குடும்பம் பின்புலம் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வர முடியும் என்ற எழுதப்படாத சட்டமாக தற்போது உள்ளது.குறுக்கு வழியில் மன்னராட்சி தற்போது தமிழகத்தில் தலை தூக்கி இருக்கிறது இதை விரட்டப்பட வேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள்.
டெல்டா மக்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை எடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அறிக்கை வெளியிட்டால், அதற்கு மௌனம் சாதிக்கிறார் ஸ்டாலின் விவசாயி கண்ணீர் சும்மா விடாது.
தமிழகத்தை காப்பாற்றி விட்டோம் என கோயம்பல்ஸ் பொய் பிரச்சாரத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை ,தமிழகத்தை காப்பாற்ற முடியாதவர் இந்தியாவை காப்பாற்ற போவதாக சொல்லுவது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்துக்கு வழிகாட்டுவது போல உள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனது தந்தையார் பெயரின் நூலகங்கள் ,நினைவு மண்டபம் அமைத்து விளம்பரம் செய்வதும், தனது தவப்புதல்வன் உதயநிதிக்கு மகுடம் சூட்டும் முயற்சியை தவிர, தமிழகத்தில் பூஜ்ஜியத்தை தான் செய்துள்ளீர்கள்.விரைவில் தேர்தலில் மக்கள் உங்களுக்கு பூஜ்ஜியத்தைத் தான் வழங்குவார்கள்.
மதுரையில் கலைஞர் நூலகத்தை யாரும் கேட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே சிம்மக்கல் மையம் நூலகம் உள்ளது அந்த நூலகம் முழுமையாக பயன்படாத சூழலில் உள்ளது .நூலகத்தை சீர் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.
ஆனால் கலைஞர் பெயரில் புதிய நூலகம் அமைத்து விளம்பர வெளிச்சத்தில் அரசு உள்ளது. அதேபோல் ஜல்லிக்கட்டு மைதானத்தை யாரும் கேட்கவில்லை தற்போது அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டிவருகின்றனர். இதற்கு கூட கருணாநிதி பெயரையோ அல்லது உதயநிதி பெயரையோ சூட்டுவார்கள். நாங்கள் நூலகத்தை எதிர்ப்பாளர் அல்ல, நூலகத்திற்கு அண்ணா பெயரை கூற வைத்திருக்கலாம்.
தற்போது கலைஞர் நூலகத்தில் ஒரு மாதமாக பராமரிப்பு பணி சரியாக இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. தற்போது கூட மாநகராட்சி இடங்களிலும், அருகே உள்ள நீச்சல் குளத்திலும் மாணவர்கள் அதிகமாக படித்து வருகிறார்கள். இதே கலைஞர் நூலகத்தில் மாணவரை கட்டாயப்படுத்தி பார்வையிட கொண்டுவரப்படுகிறார்கள். அவர்கள் படிக்க கொண்டு வரவில்லை.
அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், தாலிக்கு தங்கம் திட்டம் என அம்மா தொடங்கி வைத்த திட்டங்களை நிறுத்திய வருகின்றனர். அம்மாவின் புகழை மறைப்பதற்காக நினைத்து நாட்டு மக்களுக்கு செய்த திட்டங்களை அரசு நிறுத்தி வருவதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், அம்மா அரசு திட்டங்கள் ரத்து செய்கின்ற அரசை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்பும் காலம் வரும்.
திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. சட்டசபையில் அம்மாவை மானபங்கம் செய்தனர் அதேபோல், இந்திரா காந்தி மதுரைக்கு வந்த போது மண்டையை உடைத்து அதற்கு களங்கம் கற்பித்தார்கள்.
திமுக கூட்டத்திற்கு பெண்கள் அதிக அளவில் வர மாட்டார்கள். பெண்கள் திமுகவிற்கு சரிவர ஓட்டு கூட போடமாட்டார்கள் என கூறினார்.