சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத(சிவன்)கோவிலில் சோமவாரபிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை, பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர். இதேபோல் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.