மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா முதல் நாளில் ஜெனகை மாரியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து நவராத்திரி விழாவிற்கான சிறப்பு அம்சமாக வைக்கப்படும் கொழு பொம்மைகள் வைக்கப்பட்டது. விநாயகர் முருகன் சரஸ்வதி லட்சுமி போன்ற கடவுள்களின் திரு உருவங்களும் தமிழ் கலாச்சாரத்தை போற்றக்கூடிய பல்வேறு வகையான கொலு பொம்மைகளும் குறிப்பாக விவசாயிகள் உருவங்களும் கொழுவில் வைக்கப்பட்டிருந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த கொழு கண்காட்சியை சோழவந்தான் பகுதி பொதுமக்கள் வந்து பார்த்து சென்றனர்.

ராஜராஜேஸ்வரி வேடத்தில் இருந்த ஜெனகை மாரியம்மன் க்கு அர்ச்சகர் சண்முகவேல் சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்தார். நவராத்திரி விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா தலைமையில் பூபதி வசந்த் கவிதா சுபா உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர் 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் தினசரி ஒவ்வொரு வேடத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவில் திரௌபதி அம்மன் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் மற்றும் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா கொழு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது.




