• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம்…

Byகாயத்ரி

May 5, 2022

கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி நேற்று டென்மார்க் சென்றார்.டென்மார்க்கில் நடக்கும் இரண்டாவது, இந்தியா – நார்டிக் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றனர்.ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் 1993ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பியபோது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.