தேவையான பொருட்கள்:
சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு எல்லாம் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பாகத்தை அரைப்பாகம் கத்தியால் கீறி, கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதனுள்ளே வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். கத்திரிக்காய் பொன்னிறமாக, இருபுறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
குறிப்பு:
எண்ணெய் கத்திரி மசாலாவை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
எண்ணெய் கத்திரிக்காய் மசாலா
