பிளக்ஸ் பேனர்களால் பல உயிர்களை காவு வாங்கும் செயல் ஆங்காங்கே ஏற்பட்டு உயிர் பலி அதிகரித்து வருகின்றது. காவல் நிலையத்தில் முறைப்படி அனுமதி வாங்கிய பிறகு தான் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டும் இது கரூர் மாவட்டத்தில் தொடர்கதையாகி வருகின்றது.

உயர் நீதிமன்றம் அண்மையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கிடையாது என்றும், அதே போல் நெடுஞ்சாலையின் ஓரமாக வாகனங்களை டர்ன் செய்யும் பக்கத்தில் உள்ள பகுதியில் வைக்கும் பேனர்கள், வாக ஓட்டிகளின் திசையை திருப்புகின்றது. மேலும், பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் மேல் நடவடிக்கை எடுக்காமலும். புகார் தெரிவித்தால் அந்த புகாரின் மேல் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் அதிகரித்து தான் வருகின்றனர்.
தற்போது கரூர் மாவட்டத்தில் திருவிழா காலம் என்பதால் அதிக மக்கள் வந்து செல்கின்றனர் பேருந்து நிறுத்தத்தில் சில இடங்களிலும், திருவிழாக்கள் நடைபெறும் அருகாமையில் செல்லும் சாலைகளிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் பொதுமக்கள் நிழற்குடை அருகாமையில் இருக்கும் போது அங்கு உள்ள பிளக்ஸ் பேனர்கள் காற்றில் விழுந்துவிட்டது. அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தலை மற்றும் உயிர் நூல் அளவில் தப்பி வரும் காட்சிகளை தினந்தோறும் பார்க்க முடிகின்றது என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

சில அதிகாரிகள் துணையுடன் விளம்பரம் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும்,
அதற்கு துணையாக உயிர் பலியை ஏற்படுத்தத் துடிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
உடனடியாக கரூர் மாவட்டத்தில் உள்ள விளம்பர பதாகைகள் அப்புறம் செய்தால் இந்த காற்றடி காலத்தில் பல உயிர்களின் உயிர் சேதம் தவிர்க்கப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.