மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முள்ளை சக்தி இவர் முள்ளிபள்ளம் ஊராட்சியின் வார்டு கவுன்சிலர் ஆக கடந்த ஐந்து ஆண்டுகள் பதவி வகித்து வந்துள்ளார்.

இவரது தந்தையான துரைப்பாண்டி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராகவும் முள்ளிபள்ளம் ஊராட்சி அதிமுக கிளைச்செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தனக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக கூறப்படுகிறது. மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தனக்கு வீடு ஒதுக்க வேண்டுமென மனு அளித்துள்ளார்.

அந்த மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது அதனை அடுத்து முள்ளி பள்ளம் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் அங்கும் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று மதியம் பெய்த மழை காரணமாக இவரது ஆஸ்பெஸ்டாஸ் வீடு முழுவதும் மழையால் ஒழுகியும் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தும் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார்.

தான் அதிமுகவை சேர்ந்தவர் என்பதாலேயே தனக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அதிகாரிகள் வீடு ஒதுக்க மறுக்கிறார்கள் என புகார் தெரிவித்துள்ளார் மேலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது முள்ளி பள்ளம் பகுதியில் அம்மாவுக்கு ஆதரவாக மக்களை திரட்டி அதிகளவு வாக்குகள் பெற்றுத் தந்ததாகவும் அதன் பிறகு மாண்புமிகு சின்னமாவின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்ததாகவும் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட விவசாய பிரிவு மாவட்டச் செயலாளராக இருந்து வருவதாகவும் இதன் காரணமாகவே தனக்கு வீடு வழங்க மறுப்பதாகவும் கூறுகின்றார்.
தற்போது ஊராட்சி அலுவலகத்தில் சென்று கேட்டபோது புதிதாக மனு வழங்க கூறியுள்ளதாக கூறுகிறார் அடுத்த 15 நாட்களுக்குள் தனக்கு வீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார் ஆகையால் அரசியல் பாரபட்சம் இன்றியும் மாற்றுக் கட்சியினர் என்று கூறி மனுவை நிராகரிக்காமலும் உடனடியாக அவருக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.











; ?>)
; ?>)
; ?>)