புதுக்கோட்டை மாவட்டம் அம்மா சத்திரத்தில் சிறிய ரக பயிற்சி விமானத்தின் முன்பக்க பாகம் சேதமடைந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சாலையிலேயே தரையிறக்கப்பட்ட சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் விமான பயிற்சி மையத்திற்கு சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானத்தை டிஜிசிஏ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து நள்ளிரவு வரை விமானத்தை ஆய்வு செய்த டிஜிசிஏ அதிகாரிகள் விமானத்தில் எவ்வளவு எரிப்பொருள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதனை பத்திரமாக கேனில் சேகரித்து விமானத்தில் எரிபொருள் இல்லாமல் காலி செய்தனர் தொடர்ந்து தரையிறக்கப்பட்ட விமானத்தை றெக்கை உள்ளிட்ட பாகங்களை கழட்டி விட்டு எட்டடி அகலம் 40 அடி நீளம் கொண்ட வாகனத்தில் விமானத்தை ஏற்றிக்கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டு விமானத்தின் பாகங்களை நள்ளிரவு 40 அடி நீளம் கொண்ட லாரியில் சேலத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றனர்

மேலும் டிஜிசிஏ அதிகாரிகள் இந்த விமான விபத்து குறித்து அந்த பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு தகவல்களை சேகரித்தனர். தொடர்ந்து இன்று விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியில் விமானத்தின் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)