வாடிப்பட்டி பேரூராட்சி ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம் கட்டுமான பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணிநடந்து வருகிறது. இந்த பணியினை பேரூராட்சி உதவி இயக்குனர் மணிகண்டன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன், இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, சுகாதார பணி மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.

                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)