• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா?

ByKalamegam Viswanathan

May 14, 2025

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டாரா? திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.

இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரயில்வே எஸ்ஐ சையது குலாம் தலைமையில் போலீசார் வந்து பார்த்தபோது, இவர் ரயில் மோதி இறக்கவில்லை என கூறினார் .
மேலும் அருகில் உள்ள திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பரங்குன்றம் எஸ். ஐ. சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வந்து பார்த்தபோது, இறந்தவர் ப்ளூ கலர் கைலி சந்தன கலர் கட்டம் போட்ட சட்டையை அணிந்திருந்தார். அதில் டெய்லர் குறியை போலீசார் ஆய்வு செய்தபோது கிளாசிக் மதுரை ஏழு என இருந்தது .
இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் இங்கு எப்படி வந்தார், இவர் எப்படி இறந்தார் என அருகில் விசாரித்து பார்த்தபோது, இவரைப் பற்றி அடையாளம் தெரியவில்லை இந்நிலையில் அடையாளம் தெரியாத பிரதேசத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இவர் எப்படி இறந்தார் என்பது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.