• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ். தம்பி ஓ.ராஜா பள்ளிக்கு மணல் கடத்தல்

Byvignesh.P

Jun 7, 2022

ஓபிஎஸ். தம்பி ஓ.ராஜாவுக்கு சொந் தமான பள்ளிக்கு அரசு அனுமதியன்றி மணல் அள்ளியது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேனி கலெக்டர்
உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதி முகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓராஜாவுக்கு சொந் தமான ஆங்கிலப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்திற்கு தேவையான மண்ணை பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து அனுமதியின்றி வெட்டியெடுத்து பயன்ப டுத்தியதாக, கடந்த மாதம் 14ம் தேதி பிரபு என்பவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அரசுக்கு சொந்த மான புறம்போக்கு நிலங்க ளில் இருந்து அனுமதி யின்றிமண்ணை வெட்டி எடுத்ததன் மூலமாக அர சுக்கு வருவாய் இழப்பு மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு விளைவிக் கும் வகையில் தனியார் புளு மெட்டல் நிறுவனம் செயல்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக் கப்பட்டது.
இதையடுத்து கலெக் டர் முரளீதரன். இப் புகார்கள் மீது தாலுகா அளவிலான கண்காணிப் புக்குழுக்கள் ஆய்வு செய்து, கலெக்டர் தலைமையி லான மாவட்ட அளவி லான கண்காணிப்புக் குழுவின் மேல்நடவடிக் கைக்கு அறிக்கை சமர்ப் பிக்க வேண்டும். மேலும், தாலுகா அளவிலான கண் காணிப்பு குழு அலுவலர் கள், புகார் மனுதாரருடன்தணிக்கைமேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக் கையின் விபரங்களை கலெக்டர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத் திற்கு முன்பாக புகைப்ப டங்களுடன் அறிக்கை அனுப்பி வைக்க வேண் டும் என உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே வடவீரநா யக்கன்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பட்டா மாறுதல் செய்த வழக்கில் ஓபிஎஸ் உத வியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்நி லையில் அதே கிராமத்தில் ஓபிஎஸ் தம்பி பள்ளிக்கு அனுமதியின்றி மண் அள் ளியது தொடர்பாகவிசா ரணை நடக்க உள்ளது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.