இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கி பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது எனக்கு போட்டியாக அதிமுகவைச் சார்ந்தவர்கள், துரோகிகள் ஒ.பன்னீர்செல்வம் என்ற நபர்களை ஏற்பாடு செய்து எனக்கு போட்டியாக சுயசியாக களம் இறக்கி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நீங்கள் அனுப்பியவர்கள் எல்லாம் ஒ.பன்னீர்செல்வம் தான், நான் ஓ.பன்னீர்செல்வம் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களுக்கு பதில் சொல்லும், நீங்கள் பலாப்பழம் சின்னத்தை மறந்து விடாதீர்கள் என்ற சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.