• Thu. Dec 12th, 2024

மதுரையில் ரோட்- ஷோ நடத்துவது குறித்து வேட்பாளர் ராம. சீனிவாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

Byகுமார்

Apr 11, 2024

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் ரோட்- ஷோ நடத்துவது குறித்து வேட்பாளர் ராம. சீனிவாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

கிராம பகுதிகளில் மோடி பெயர் நல்லா தெரிகிறது. கடந்த ஆட்சியில் அவர்கள் பெயர் குடும்ப பெயர் வைப்பார்கள் ஐயா மோடி ‌அவர் பெயர் வைப்பதில்லை. நாங்க கேட்ட போது பக்கங்கள் வரிப்பணம் அதில் என் பெயர் வைக்க வேண்டாம் என கூறினார். ஆனாலும் கிராம பகுதிகளில் மோடியின் பெயரை மக்கள் உச்சரித்து வருகிறார்கள்.

இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்து பாஜக இன்று போட்டியிடுகிறோம். மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. அதில் நாங்க போட்டியிடுகிறோம்.

அனைத்து சங்கங்கள் அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து பிரச்சுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறோம்‌. உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு நாளை வருகிறார்கள்.

ரோட்- ஷோ ஆரியபவன் முருகன் கோயிலில் மாலைக்கு 6 மணிக்கு ஆரம்பித்து விளக்குதூன் பகுதியில் முடிவடைகிறது.

தேர்தல் களத்தில் பணிபுரியும் பூத் ஊழியர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.திமுக அதிமுக வை எதிர்த்து தான் பாஜக போட்டியிடுகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் கைரேகை போலி என கூறியவரே ‌அதிமுக-வில் வேட்பாளராக‌ நிறுத்தியிருப்பது ஜெ.வுக்கு செய்த துரோகம்.உறுதியாக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும்.

மதுரையில் பஸ் போர்ட், மதுரை தூத்துக்குடி இன்டஸ்ட்ரியல் கார்டர், வைகை தூர் வாரும் பணி மத்திய அரசின் நலத்திட்டங்களை முத்ரா கடன், மகளிர் சுய உதவி குழுகடன் உள்ளிட்டவைகளை கொண்டு வருவோம்‌ என தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளோம் என்றார்.