• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பி.ஆர்க் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

Byவிஷா

Dec 25, 2023
இளநிலை தோட்டக்கலை பி ஆர்க் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு 2024, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய தோட்டக்கலை கவுன்சிலிங் அறிவித்துள்ளது. 
பி ஆர்க் எனப்படும் ஐந்தாண்டு இளநிலை கட்டிடக்கலை படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் நாட்டா நுழைவு தேர்வை எழுத வேண்டும். இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்குகின்றது. மேலும் நுழைவு தேர்வுக்கான கல்வி தகுதி, பாடத்திட்டம் மற்றும் விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.